அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11 மணிக்கு விழுப்புரம் வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 19 பாராளுமன்ற தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஆதி திராவிட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
ராகுல்காந்தி வருகையை யொட்டி அவர் பேசுகின்ற இடம் மற்றும் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடத்தை தேர்வு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரத்தில் உள்ள ஜெயம் மண்டபம், கரும்பு விவசாயிகள் மண்டபம் ஆகியவற்றை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஹர்ஸ்வர்த் நேற்று வந்து பார்வையிட்டார். அவருடன் விழுப்புரம் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.ரமேஷ், துணை தலைவர் சிவா, விழுப்புரம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், விழுப்புரம் பாராளுமன்ற துணை தலைவர் ரகுநாதன், பொதுச்செயலாளர் சேட்டு என்கிற இக்பால் ஆகியோர் வந்திருந்தனர்.
வானூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் தண்டபாணி, விக்கிரவாண்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ்குமார், உளுந்தூர்பேட்டை பொதுச் செயலாளர்கள் ஹரி, வெங்கடேசன், விழுப்புரம் சட்டமன்ற பொதுச் செயலாளர் மணிகண்டன், விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவர் குலாம் மொய்தீன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தார்கள்.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இன்று விழுப்புரத்திற்கு வருகின்றனர். ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்கின்றனர். விழுப்புரத்திற்கு வரும் ராகுல் காந்தியை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர் வருகையை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
0 comments: