சென்னை, டிச. 28-
சென்னையில் 2011 புத்தாண்டு கொண்டாட்டம் நட்சத்திர ஓட்டல்களில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
மது விருந்து, நடன நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாநிலங்களில்
இருந்தும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து நடன அழகிகளை அழைத்து வருகிறார்கள்.
2007-ம் ஆண்டு தனியார் ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடத்தினார்கள்.
அப்போது மேடை சரிந்து நீரில் மூழ்கியதால் உயிர்ப்பலி ஏற்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் 45 பேர், கேளிக்கை விடுதி, கிளப்புகளின் உரிமை யாளர்கள், நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், தென்சென்னை இணை கமிஷனர் சக்தி வேல், துணை கமிஷனர்கள் சாரங்கன், பெரியய்யா, லட்சுமி, சண்முகவேல் உள்பட போலீஸ் அதிகாரி களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
* போக்குவரத்துக்கு இடையூறு இன்றி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருபவர்களது வாகனங்களை நிறுத்த இட வசதி செய்து தரவேண்டும்.
* புத்தாண்டு கொண்டாட வரும் பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
* இட வசதிக்கேற்ப மட்டுமே ஆட்களை அனுமதிக்க வேண்டும்.
* ஓட்டல்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்.
இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.

0 comments:
Confused? Feel free to ask