சென்னை, டிச. 30-
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.
சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி ஏற்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. வுடன் புதிதாக கூட்டணி அமைக்கும் கட்சிகள் எவை என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் மாலை 3.45 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொதுக்குழு, செயற் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப் பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்பட சுமார் 150 பேர் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழுவில் பொதுக் குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பது, தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து தொண்டர்கள் கருத்தை ஜெயலலிதா கேட்டு அறி கிறார். இது தொடர்பான அறிவுரைகளையும் செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.
கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. முன்னதாக எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்துவார் என்று தெரி கிறது.
இன்றைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்படு கின்றன. பொதுக்குழுவில் ஜெயலலிதா சிறப்புரையாற்றுகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி, அது நடைபெறும் மண்டபம் அமைந்துள்ள வானகரம் பகுதியில் கொடி, தோரணங் கள் கட்டப்பட்டுள்ளன. வழி நெடுக ஜெயலலிதாவை வரவேற்கும் வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. வின் பல்வேறு பிரிவுகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Confused? Feel free to ask