சென்னை, டிச. 29-
பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் “வில்லு” படப்பிடிப்பில் காதல் பிறந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.பிரபுதேவா மனைவி ரம்லத் இந்த காதலை எதிர்த்தார். திருமணத்துக்கு தடைக்கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா-நயன்தாரா இருவரும் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பினார்.இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக நேற்று பிரபுதேவா-ரம்லத் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்து குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் சேர்ந்தே வந்து இந்த மனுவை தாக்கல் செய்தார்கள். அதில் கூறி இருப்பதாவது:-
எங்களுக்கு 1995ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் பசவராஜூ 2008-ம் ஆண்டு டிசம்பரில் இறந்தான். எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடும் புரிதன் இன்மையும் ஏற்பட்டு உள்ளது. இனிமேல் சேர்ந்து வாழ்வது கடினம் என்று புரிந்து கொண்டோம்.
எங்களால் சந்தோஷமாக வாழமுடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தனியாகத்தான் வாழ்கிறோம். எங்களை சேர்த்து வைக்க நண்பர்களும் நல விரும்பிகளும் முயன்றனர். அது பலனிக்கவில்லை. எனவே விவாகரத்து கோருகிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
பிரபுதேவா-ரம்லத் இருவரும் சம்மதித்து விவாகரத்து கோருவதால் இருவருக்கும் சீக்கிரமே விவாகரத்து கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நயன்தாரா மகிழ்ச்சி அடைந்தார். அவர் கடந்த சில மாதங்களாகவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தமிழில் கடைசியாக நடித்த படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. அதன் பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கன்னடத்தில் ரூ.1 கோடி சம்பளத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறி விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ரம்லத் வழக்கால் அது தடைப்பட்டது. தற்போது மீண்டும் திருமண ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விவாகரத்து கிடைத்த உடனேயே திருமணம் நடை பெறும் என கூறப்படுகிறது.
0 comments: