பிஜி, டிச.25-
பிஜித்தீவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டு தீவில் இன்று சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் தாக்கிய இந்த பூமி அதிர்ச்சியால், வானாட்டு தீவே அதிர்ந்தது. பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து, வானாட்டு தீவையும், அதன் அருகே உள்ள பிஜித்தீவு, நியூ கலிடோனியா ஆகிய நாடுகளையும் சுனாமி தாக்கக்கூடும் என்று அமெரிக்காவின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்தது.
20 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்துக்குள் சுனாமி தாக்கும் என்று கூறியது. ஆனால், சுனாமி வரவில்லை. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
0 comments:
Confused? Feel free to ask