உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 30 பேர் கொண்ட தேர்வு அணியை வருகிற 19-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. காலக்கெடு விதித்து இருந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் உத்தேச அணியை அறிவித்துவிட்டது.
30 பேர் கொண்ட இந்திய தேர்வு அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணியில் 4 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர். தோனி, பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்தி, சஹா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த உத்தேச அணியில் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் அணியில் இடம் பெறவில்லை. செட்டீஸ்வர் புஜாரா, அஜின்கையா ரகானே என இரண்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்து.
30 பேர் கொண்ட பட்டியல் விபரம் வருமாறு: எம்.எஸ்.தோனி, வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர், வீராட் ஹோக்லி, யுவராஜ் சிங், சுரேஸ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், ஆஸிஸ் நெக்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், இஷாந்த் சர்மா, வினய் குமார், எம்.விஜய், ரோகிந்த் சர்மா, ரவீந்தர ஜடேஜா, அஜின்கையா ரகானே, சௌரப் திவாரி, யூசப் பதான், பார்தீவ் பட்டேல், ஆர்.அஸ்வின், விரித்திமான் சகா, தினேஷ் கார்த்திக், ஷிகார் தாவான், அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா, செட்டீஸ்வர் புஜரா, ப்ராக்யான் ஓஜா, ப்ரவீன் குமார்.
இந்த 30 பேர் கொண்ட அணியில் இருந்து இறுதியாக 15 வீரர்கள் தேர்வு பெறுவார்கள். உத்தேச அணியை தேர்வு செய்ய பாகிஸ்தான் அணிக்கு மட்டும் 5-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. அந்த அணியில் சோயிப் மாலிக், கனேரியா, கமரன் அக்மல் ஆகியோரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இதனால் வீரர்களை தேர்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவகாசம் கேட்டு இருந்தது. இதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்து அவகாசம் கொடுத்து உள்ளது.
0 comments:
Confused? Feel free to ask