டெக்காஸ், டிச. 26-
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. இவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்.) படிக்க அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்று இருந்தார். படித்துக் கொண்டே இவர் அங்கு 24 மணி நேரமும் திறந்து இருக்கும் பல்பொருள் அங்காடியில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டிருந்தார். கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர் அங்கு பணியில் இருந்தார்.
அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி 2 பேர் கொள்ளையர் வந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த ஜெயச்சந்திராவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில், 5 குண்டுகள் பாய்ந்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட ஜெயச்சந்திராவின் உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் வடஅமெரிக்க தெலுங்கர்கள் சங்க பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.
0 comments: