ராயபுரம், டிச. 25-
ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நேற்று நடந்தது. நார்த் வீக் பள்ளிக்கூடம் அருகே தொழிலாளர்கள் வந்தவாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி (35), கிருஷ்ணமூர்த்தி (25), வெங்கடஸ்வரன் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த பள்ளிக்கூட சுவர் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்களையும் அமுக்கியது.
இதில் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வெங்கடேஸ்வரன் பலத்த காயத்துடன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கட்டுமான பணி காண்டிராக்டர்கள் ரமேஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
0 comments: