மைசூர், டிச.25-
மைசூர் பஸ் நிலையம் அருகே உள்ள இர்வின் ரோட்டில் இரும்பு சாமான்கள் உள்பட பழைய பொருட்களை வாங்கும் கடை இருந்தது. இந்த கடையில் 8 பேர் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் அந்த கடையில் திடீர் என்று தீப்பிடித்தது. கடையில் இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வருவதற்குள் தீ கடை முழுவதும் பரவி தகதகவென எரிந்தது.
தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையின் உள்பகுதியில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் 4 பேர் தீயில் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் கடை உரிமையாளர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்
0 comments:
Confused? Feel free to ask