மும்பையைச் சேர்ந்தவர் ஆஷா (30). விபசார அழகியான இவர் சென்னையில் தங்கி இருந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். எழும்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் இவர் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, விபசார தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து ஆஷாவை பிடித்தனர். கடந்த 3 மாதத்துக்கு முன்னர் போலீசில் சிக்கிய இவர், கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தங்கி இருந்தபோது அவருக்கு எய்ட்ஸ் நோயின் அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13-ந் தேதி ஆஷாவின் உடல்நிலை மோசமானது.
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஷா நேற்று இரவு பலியானார்.
போலீஸ் பிடியில் சிக்கி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட விபசார அழகி ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கு பலியானது இதுவே முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னையை பொறுத்த வரை வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர் ஆகியோர் தினந்தோறும் வந்து செல்லும் இடமாக திகழ்கிறது. இதனால் விபசார அழகி கள் சென்னையை மையமாக வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கேரளா, ஆந்திரா, மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தில் பறந்து வரும் அழகிகள் இங்கு சில மாதங்கள் மட்டுமே தங்கி இருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டு செல்கிறார்கள்.
இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் புரோக்கர்களும் லட்சாதிபதிகளாகியுள்ளனர். விபசார தடுப்பு பிரிவு போலீசார் பெயரளவுக்கு மட்டுமே ரெய்டுகள் நடத்தி வருகிறார்கள்.
இதனால் விபசாரத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. விபசார அழகி ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கு பலியான சம்பவம் விபசார தடுப்பு பிரிவு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரைப் போல எய்ட்ஸ் பாதித்த அழகிகள் பலர் சென்னையில் இருந்து எய்ட்ஸ் நோயை வேகமாக பரப்பி வருகிறார்கள்.
இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது விபசார தடுப்பு பிரிவு போலீசாரின் கடமையாகும்.
1 comments:
More shit in INDIA.we want to clean it first
Confused? Feel free to ask