சென்னை, டிச. 28-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2006-ல் கருணாநிதி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பு ஊதியத்திற்குப் பதிலாக, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவையுடன் இணைந்த கூட்டுறவு நியாயவிலைக் கடைப்பணியாளர் சங்கமும் மற்றும் சில சங்கங்களும், கூட்டுறவு நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசுக்கு அளித்திருந்தன.
அக்கோரிக்கைகளை பரிசீலித்திட, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அக்குழு, கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும், எடையாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அளித்துள்ள பரிந்துரை ஏற்கப்பட்டது.
அதன்படி புதிதாக நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் மாத தொகுப்பு ஊதியமான 3,000 ரூபாயை, இனி 4,000 ரூபாயாகவும், எடையாளர்களுக்கு வழங்கப்படும் மாத தொகுப்பூதியத்தை 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும் உயர்த்தியும்,
இவர்களின் தொகுப்பூதியம் பெறும் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை ஓராண்டாக குறைத்தும், ஓராண்டிற்குப் பிறகு விற்பனையாளர்களுக்குக் காலமுறை ஊதியமாக ரூ.3,300 - ரூ.8,000 என்ற ஊதிய விகிதமும், எடையாளர்களுக்கு ரூ.3,000 -ரூ.7,000 என்ற ஊதிய விகிதமும் வழங்கப்படும்.
இதுதவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப் படியாக மாதம் 1000 ரூபாயும்; இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப்படியாக 750 ரூபாயும்; எடையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாதம் 500 ரூபாயும், இதர பகுதிகளில் மாதம் 250 ரூபாயும் வழங்கிடவும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
மேலும் இப்பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல அகவிலைப்படி வழங்கிடவும், அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதத் தொகை ஆண்டு ஊதிய உயர்வாக அளித்திடவும், 15 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு, முறையே தேர்வுநிலையில் ஊதிய உயர்வு அளித்து ஊதியம் நிர்ணயம் செய்து, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம், வீட்டு வாடகைப்படியாகவும் வழங்கப்படும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நகர ஈட்டுப்படியாக அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும், இதர மாநகராட்சிப் பகுதிகளில் 4 சதவீதமும் நகர ஈட்டுப்படியாக வழங்கப்படும்.
இத்துடன், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் - உயரிய மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தியும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின்படி திருத்தப்பட்ட ஊதியங்களை 1.1.2010 முதல் நடைமுறைப்படுத்தி, அதன் பணப்பயன் 1.1.2011 முதல் வழங்கப்படும்.
இதன்மூலம் 23 ஆயிரத்து 377 கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் பயன்பெறுவார்கள்.

0 comments:
Confused? Feel free to ask