மதுரை ஆஸ்பத்திரியில் நடிகர் ராமராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ராமராஜன் கடந்த 11-ந்தேதி இரவு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரது உறவினருக்கு இடுப்பு-கை பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை அண்ணாநகரில் உள்ள அப்பல்லோ ஆஸ் பத்திரியில் அனுமதிக் கப்பட்ட நடிகர் ராமராஜனுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமராஜனின் இடுப்பு- கைகளில் ஆபரேசன் செய்யப்பட்டது.
தற்போது ராமராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர் குழுவினர் அவரை தீவிரமாக கவனித்து வருகிறார்கள். ராமராஜனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் கூறுகையில் அவருக்கு ஆபரேசன் முடிந்த பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை தேறி வருவதால் இன்னும் 3 நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார் என்று தெரிவித்தனர். சிகிச்சை பெற்றுவரும் ராமராஜனை அ.தி.மு.க. நிர்வாகிகள், நடிகர்கள் மற்றும் உறவினர்கள் பார்த்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
0 comments: