Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Thursday, December 30, 2010

ஆபாச வீடியோ காட்சி கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டினார்கள்; சாமியார் நித்யானந்தா பரபரப்பு தகவல்


Labels:

திருவண்ணாமலை, டிச. 30-

நித்யானந்த சாமியாரின் 34-வது பிறந்தநாள் விழா நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்த தியான பீடத்தில் நடந்தது.
 
இதில் நித்யானந்தா சாமியார் பேசியதாவது:- 

33 ஆண்டுகளை முடித்து 34-வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொது மேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன். எனது 10 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஜீவ முக்த சமுதாயம் அமைய விதையாவது விதைத்துள் ளோம், அதை ஆலமரமாக உலகெங்கும் கொண்டு செல்வோம்.

தங்கள் துறையில் இருப் பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை. எத்தனை முறை தாக்கினாலும் தாக்கு பிடிப்போம் என்பதுதான் நமது வெற்றி. நாம் அழிக்க முடியாத விதையாக உருவாகி விட்டோம். 

120 இடங்களில் வழி பாட்டு தலங்கள் உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட் டும்தான் 17 இடங்களில் வழி பாட்டு தலங்களை கொழுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகளை கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் பக்தர்கள் தாக்கப்பட்டனர்.

திருப்பி தாக்காதீர்கள் என்ற எனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதி காத் ததுதான் நீங்கள் எனக்கு கொடுத்த குருகாணிக்கை. என் துறை வேறு, அவர் கள் துறைவேறு, அவர் கள் தவறு வெளியே வரக் கூடாது என்பதற்காக திருப்பி, திருப்பி அழிக்க நினைத்தார்கள். அவர் களை விரோதிகளாக கருதப் போவதில்லை.

எல்லோருக்கும் இழைக் கப்பட்ட அநீதியை தமிழக முதல்வருக்கு எங்கள் உணர்வை உருக்கி கடிதமாக எழுதி உள்ளேன். அதில் உங்கள் கண்ணீர், வேதனை எழுத்தப்பட்டுள்ளது. எங்கள் வழிபாட்டு சுதந்திரத்தை மீட்டு தாருங்கள், மத சுதந் திரத்தை மீட்டு தாருங்கள் என்று எழுதி இருக்கிறேன். முதல்வர் கலைஞரும் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடித்தத்தில் எனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு அனுப்புகிறேன், ஒரு லட்சம் பக்தர்களும் ரத்த கையெழுத்து போட்டும், ரத்தத்தால் கைநாட்டு வைத் தும் அனுப்புகிறோம். எங்கள் ரத்தத்தை சிந்துவதை தவிர வேறு வழியில்லை. உங்களை சந்திக்க நேரம் கிடைத்தால் நானே நேரில் வந்து சந்திக்கிறேன். எங்களை அழிக்க நினைக்கிறார்கள். இனியும் பொறுத்து கொள்வது நீங்கள் ஆளும் நாட்டில் எங்கள் மக்களால் முடியாது. 

நாங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரத்தை உளவுத் துறை மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பிறகும் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால் கன்னியாக்குமரியில் இருந்து பாத யாத்திரை நடத்துவோம். அப்போது வீடுவீடாக சென்று பிச்சை எடுத்து மதஉரிமையை பாதுகாப்போம்.

கோடிகணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டேன், மிரட்டிய நபர்கள் யார் என்பதை கோர்ட்டில் தெரி விப்பேன். அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை. அதனால் பக்தர்கள் மிரட்டப்பட்டு அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டது.

அதற்கு போதிய ஆதா ரம் இல்லாததால் அமைதி காத்தோம். இதற்கு மேலும் சொல்லப்படாமல் இருந் தால் அது சொல்லாமலேயே அழிந்துவிடும் என்பதால் உலகின் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேற்கண்டவாறு நித்யானந்தா பேசினார். 

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:- 
 

கேள்வி:- டி.வி.யில் வெளியான சி.டி. உண்மையா? அதில் இருப்பது நீங்கள் தானே?.

பதில்:- எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை சித்தரிக்கப் பட்டவை. நீதி மன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.

கேள்வி:- உங்கள் படுக்கை அறியில் கேமரா வைத்த வருக்கும், உங்களுக்கும் என்ற உறவு முறை, என்ன கருத்து வேறுபாடு?.

பதில்:- அவர் எனது சீடராக இருந்தார். வேறு காரணம் தெரியவில்லை.

ரஞ்சிதாவை பார்த்திருக்கிறீர்களா?

கேள்வி:- ரஞ்சிதாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும், அவரை நீங்கள் நேரில் சந்திதிருக் கிறீர்களா?

பதில்:- ரஞ்சிதா எனது பக்தை, அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும், அவர் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார்.

கேள்வி:- எதற்காக உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி னார்கள்?.

பதில்:- சி.டி.யை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டார்கள். கெட்ட பெயரை ஏற்படுத்தி, புகார் கொடுத்து சட்டரீதியாக மிரட்டுவோம் என்று கூறினர்.

இவ்வாறு நித்யானந்தா சாமியார் கூறினார்.

0 comments:

Confused? Feel free to ask

 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz