“அருந்ததி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. “சிங்கம்” படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். தற்போது “வானம்” படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கும் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர். பின்னர் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டது.
தற்போது தெலுங்கு நடிகர் கிரிஷை அனுஷ்கா காதலிப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. கிரிஷ் “கம்பம்”, “வேதம்” போன்ற தெலுங்கு படங்களை டைரக்டு செய்துள்ளார். “வேதம்” படத்தில் அனுஷ்கா நடித்தார்.
அப்போது காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதல் விஷயத்தை மறைத்து வைத்திருந்தனர். இப்போது அது வெளியே கசிய துவங்கி உள்ளது. விரைவில் கிரிஷை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என்கின்றனர்.
0 comments:
Confused? Feel free to ask