புதுடெல்லி, மே.6-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடநத மாதம் 25-ந்தேதி டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கலைஞர் டி.வி. பங்குதாரர் என்ற முறையில் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. இயக்குனர்களில் ஒருவரான சரத்குமார் ஆகியோரது பெயர்கள் அந்த குற்றப்த்திரிகையில் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கனிமொழி உள்பட 14 பேருக்கு மே6-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது அதனை தொடர்ந்து கனிமொழி கடந்த புதன்கிழமை டெல்லி சென்றார். கடந்த இரண்டு நாட்களாக அவர் சட்ட ரீதியாக எதிர் கொள்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இன்று (மே-6) காலை 9.30 மணிக்கு கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் மேலும் தி .மு க எம்.பிக்கள் 5 பேர் உடன் சென்றார். 10 மணிக்கு உள்ளே சென்ற கனிமொழி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்னிலையில் ஆஜர் ஆனார்.
இவ்வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. சார்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜரானார்.
அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைக்கேடுக்கும் கனிமொழி எம்.பி.க்கும் எந்த தொடர்பும் இல்லை கலைஞர் தொலைக்காட்சியில் அவர் ஒரு பங்குதாரர் மட்டுமே அதுவும் அவரிடம் பெரும்பாலான பங்குகள் கூட இல்லை 20 சதவீத பங்கு மட்டும் உள்ளது. மற்றபடி எந்த விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு கிடையாது. மேலும் கலைஞர் டி.வி. தினசரி நடவடிக்கைகள் எதிலும் கனிமொழி தலையிடுவது இல்லை. அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி செய்தாக கூறுவது தவறு.
சதி குற்றச்சாட்டுகளில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா பெயர் தான் இடம் பெற்றுள்ளது. கனிமொழி பெயர் எதிலும் இல்லை எனவே சதி செயல்களுக்கு ராசா மட்டுமே பொறுப்பாவார்.
பின்னர் இந்திய குற்றவியல் சட்டபிரிவு 437-ன்படி பெண்கள், முதியோர், குழந்தைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கனிமொழி எம்.பிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார்.
இதை தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணை 2 மணியளவில் தொடங்கியது அதில் சி.பி.ஐ தரப்பு வக்கீல் லலித் வாதாடினார். அதில் கனிமொழி எம்.பியிடம் சில கேள்விகள் கேட்டார் கனிமொழி எம்.பி. 2ஜி ஊழலுக்கு உடந்தையாக இருந்து உள்ளார்.அதற்கு ஆதாரங்கள் உள்ளது.
மேலும் எம்.பியாக இருந்து கொண்டு இவ்வாறு ஊழல் செய்தது அப்பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதாக உள்ளது . இதற்காக இந்திய குற்றவியல் சட்டபிரிவு 120பி-ன்படி ஊழலுக்கு உடந்தையா இருந்ததற்கு அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கனிமொழியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி நீதிமன்றம் நாளை வரை ஒத்தி வைத்துள்ளது. ஆனால் ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஜாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோருக்கு முன் ஜாமீன் தர டெல்லி நிதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும் நேற்று தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சட்டப்படி எதிர் கொண்டு இவ்வழக்கிலிருந்து வெளிவருவேன் என்றும் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு கடுமையானது அந்த கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன் என்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன் ஜாமினுக்கு தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்
இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கனிமொழி . மாலையில் விசாரணை முடிந்து வெளியே வந்த போது அவரது கணவர் அரவிந்தன் உடன் வந்தார். ஆனால் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.
0 comments:
Confused? Feel free to ask