சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணிமாறன், நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன், ராணிப்பேட்டை பாலாஜி ஆகியோர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா விடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் ஜான்நியூ பினோத் என்பவர் ஜெர்மனி, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினார். பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வசேகர், சப்- இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று நண்பகல் தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் நியூ பினோத்தை பிடித்து விசாரணை செய்ததில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார்.
மேலும் விசாரணையில் தானும், தனது நண்பர் சலீம் என்பவரும் சேர்ந்து இதே போல் கடலூரிலும் 75-க்கும் மேற்பட்டவர்களிடம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, போலியான விமான பயணச்சீட்டு, விசா, வேலைக்கான உத்தரவு ஆகியவற்றை தயார் செய்து கொடுத்து ஏமாற்றி விட்டு, தலைமறைவாகியதாக கூறி னார்கள்.
கைது செய்யப்பட்ட ஜான் நியூ பினோத் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0 comments:
Confused? Feel free to ask