Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Thursday, December 30, 2010

நெல்லை அருகே விபத்து; ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் நசுங்கி சாவு


Labels:

ஆலங்குளம், டிச.30-

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகன் ஆசாரி மகன் கனி (வயது 40), கூலி தொழிலாளி. அவர் நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தில் வசித்து வந்தார். கனியின் மனைவி ஊரான சீதபற்ப நல்லூர் அருகே உள்ள காங்கேயன்குளத்தில் மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

கொடை விழாவுக்கு கனி மற்றும் அவருடைய உறவினர்கள் வந்து இருந்தனர். விழா முடிந்ததும் கனி மற்றும் அவரது உறவினர்களான பாளைய சமாதானபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பேச்சித்துரை (32), கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருமைக்கனி மகன் சாமித்துரை (37) ஆகியோர் காங்கேயன்குளத்தில் இருந்து மாறாந்தைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

புதூருக்கு கீழ்புறம் உள்ள முதியோர் காப்பகம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் திடீர் என்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, அருள் கிறிஸ்டோபர் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேர் உடல்களையும் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான கனிக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 வயது மகனும் உள்ளனர். சாமித்துரை வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

பேச்சித்துரை தச்சு தொழிலாளி. அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 1 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வி என்று பெயர் சூட்டினர்.கனியும், பேச்சித்துரையும் அக்காள்- தங்கை உறவு முறை கொண்டவர்களை திருமணம் செய்து உள்ளனர்.
 

ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பஸ் டிரைவர் புளியங்குடியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ராஜூவை கைது செய்தனர்.

1 comments:

Amazing Tamilnadu on December 30, 2010 at 4:38 PM said...

Kolupu pudicha government bus drivers

Confused? Feel free to ask

 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz