சென்னை, ஜன.4-
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம்டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்றுகாட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாடு முடிந்ததும்அங்கிருந்து கார் மூலம் போர்டு கார் தொழிற்சாலை வளாகத்தைவந்தடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைமீனம்பாக்கம் விமானம் நிலையத்திற்கு பகல் 12.05 மணிக்கு வந்து சேர்ந்தார். பிரதமருடன் துணை முதல்-மந்திரி மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, தயாநிதிமாறன் ஆகியோர் வந்தனர். 98-
இதன் பின்பு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, துணை முதல்-மந்திரிமு.க.ஸ்டாலின் மலர் செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், சென்னைமாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள்ஆற்காடு வீராசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், தங்கம் தென்னரசு, தமிழககாங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தலைமைச்செயலாளர் மாலதி, எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி ஜே.எம்.ஆருண், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, ராணிவெங்கடேசன், மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச்செயலாளர்எஸ்.கே.ஏ. அகமது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வழியனுப்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் தனி விமானம்மூலம் பகல் 2.30 மணிக்கு டெல்லி திரும்பினார். பிரதமருடன் மத்திய மந்திரிப.சிதம்பரம் உடன் சென்றார்.
0 comments:
Confused? Feel free to ask