வேலூர் சி.எம்.சி.யில் குழந்தைகளுக்கான நோய்கள் என்ற தலைப்பில் குளிர்கால கருத்தரங்கு நடந்தது. அதில், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் குறித்தும் அவற்றை குணப்படுத்தும் சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவற்றை குணப்படுத்த முடிவதில்லை.
ஏனெனில் பொருளாதார பற்றாக் குறையே இதற்கு காரணமாக உள்ளது என்று டாக்டர்கள் கூறினர். வளர்ந்த நாடுகளில் 20 சதவீதமும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 80 சதவீதம் குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்படும் 90 சதவீத குழந்தைகள் காப் பாற்றப்படுகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் 20 முதல் 40 சதவீதம் குழந்தைகள் மட்டுமே குணப்படுத்தப்படுகின்றனர். இருந்தும் வெளிநாடுகளை விட இந்தியாவில்தான் குழந்தைகள் ஆரோக்கியத் துடன் பிறக்கின்றன.
ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சத்தாண உணவு கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவலை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முரளி சிந்த கும்பாலா தெரிவித்தார்.
அமெரிக்காவில் கூடுதல் இரும்பு சத்து காரணமாக பெரும்பாலான குழந்தைகள் அவதிப்படுகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் போதிய அளவு இரும்பு சத்து கிடைக்காமல் நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்ற தகவலை டியூக் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளிட முதல்வர் நான்சி சி.ஆண்ட்ரூஸ் கூறினார்.

0 comments:
Confused? Feel free to ask