சென்னை, ஜன.4-
நடிகர் விஜயகுமார் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகை வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் செய்தார். விஜயகுமார் தரப்பில் இருந்தும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை நடிகை வனிதா தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியை (வயது 9) தன்னிடம் இருந்து ஆகாஷ் கடத்தி சென்றுவிட்டதாகவும், சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்தனர். ஜனவரி 5-ந் தேதிக்குள் சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். காலக்கெடு 2 நாட்களே உள்ள நிலையில், சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தான். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு விஜய்
ஸ்ரீ ஹரி அளித்த பதில்களும் வருமாறு:-
ஸ்ரீ ஹரி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீ யாருடன் போக விரும்புகிறாய்?.
பதில்:- அப்பாவுடன்.
கேள்வி:- ஏன்?.
பதில்:- அம்மாவுடன் போனால் டார்ச்சர் செய்வாங்க.
கேள்வி:- அம்மா உன்னை நன்றாக பார்த்து கொண்டதாக கூறுகிறாரே?.
பதில்:- அப்படி ஒன்றும் இல்லை. எனது வளர்ப்பு தந்தை ஆனந்தராஜன், தினமும் நான் பள்ளிக்கூடம் செல்லும் போது, `குட்மானிங்' சொல்ல வேண்டும்என்று கூறுவார். நான் சொல்ல சென்றால், நன்றாக தூங்கிக் கொண்டுஇருப்பார். எழுப்பினால், கண் விழிக்க மாட்டார். நான் பள்ளிக்குசென்றுவிடுவேன். மாலையில் வீட்டிற்கு வந்தால், ஏன்? காலையில்சொல்லிவிட்டு செல்லவில்லை என்று என்னை அடிப்பார். முழங்கால் போடச்சொல்வார். இதை அம்மா (வனிதா) தட்டிக் கேட்க மாட்டார். அவர்கள் இரண்டுபேரும் மாலையிலேயே பார்ட்டிக்கு செல்வதாக கூறி சென்று விடுவார்கள். வீட்டில் 2 பேரும் மது அருந்தும் போதும், என்னை பிரிட்ஜில் இருந்து ஐஸ்எடுத்து வரச் சொல்வார்கள். எனக்கு டீ கூட வேலைக்கார பெண்தான் தருவாள்.
கேள்வி:- வனிதாவுடன்தான் நீ செல்ல வேண்டும் என்று கோர்ட்டுகூறியுள்ளதே?.
பதில்:- போகமாட்டேன். அப்படி சொன்னால் அங்கேயே அழுது புரளுவேன்.
இவ்வாறு சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரி கூறினான்.
அதனைத் தொடர்ந்து, அவனது பாட்டி மகேஸ்வரி (ஆகாஷின் அம்மா) நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது பேரனை மையமாக வைத்து நடக்கும் பிரச்சினை உங்களுக்கு எல்லாம் தெரியும். அவன் சுதந்திரமாக படிக்க, எங்களுடன் இருக்க விரும்புகிறான். அங்கு சென்றால் (வனிதாவிடம்) செத்து விடுவேன் என்று புலம்புகிறான்.
சிறுவயதிலேயே அவன் படும் வேதனையை பார்க்க எங்களால் முடியவில்லை. 7 வயது வரை அவன் எங்களுடன்தான் இருந்தான். அதன் பின்னர்தான் அங்கு வளர்ந்தான். எனது பையன் (ஆகாஷ்) வாழ்க்கைதான் வீணாகிவிட்டது. என் பேரன் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது.
இப்போதுகூட பள்ளிக்கூடம் சென்றால் எங்கே கடத்தி விடுவார்களோ? என்று பயந்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளான். எனது மகன் ஆகாஷ் இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆகாஷ் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Confused? Feel free to ask