புதுடெல்லி, ஜன.4-
உணவு பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் டீசல் விலையை உயர்த்தும்முடிவை மார்ச் மாதம் வரை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டுவருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதனால், பெட்ரோல்விலையை சர்வதேச சந்தைக்கு ஏற்ப அந்தந்த எண்ணெய் நிறுவனங்களேஉயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்து விட்டது. அதன் காரணமாக கடந்தஓராண்டுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, டீசல் விலையையும் உயர்த்த வேண்டும் என எண்ணெய்நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. டீசல் விற்பனையால் ஐ.ஓ.சி., பாரத்பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.128 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, டீசல் விலையைஉயர்த்த வேண்டும் அல்லது எண்ணெய் நிறுவனங்களே விலையை உயர்த்தஅனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
பெட்ரோலை போல டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தஅனுமதித்தால் லாரி வாடகை உயரும். அதனால், அத்தியாவசியபொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். அதன் காரணமாக, டீசல்விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவது குறித்து மத்திய மந்திரிகள் குழுகூட்டத்தில் கடந்த மாதம் ஆலோசிக்கப்பட்டது. இரண்டு முறை விவாதம்நடந்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, எதிர்பார்க்காத அளவுக்கு உணவுப் பொருட்களின் பணவீக்கம்சதவீதமாக உயர்ந்துவிட்டது. அதன் விளைவாக ஒட்டு மொத்த பணவீக்கமும் கணிசமாக அதிகரித்தது. எனினும், ஒட்டு மொத்த பணவீக்கத்தின்அளவானது மார்ச் மாதத்துக்குள் 6 முதல் 6.5 சதவீதத்துக்குள் வந்து விடும் எனமத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 14.44
இதைத் தொடர்ந்து, டீசல் விலை உயர்வையும் மார்ச் இறுதி வரை ஒத்திவைக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிரதமரின் பொருளாதாரஆலோசனை குழு நேற்று தெரிவித்தது.
குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில், "ஒருவேளை, இந்த ஆண்டுஇறுதிக்குள் 6 சதவீதத்துக்கு பணவீக்கத்தின் அளவு குறைந்தால் டீசல்விலையை உயர்த்துவதற்கான நேரம் வந்து விட்டதாக கருதலாம். சர்வதேசசந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலை சரிசெய்யப்படும் சாத்தியமும் உள்ளது'' என்றார். (2011)
0 comments:
Confused? Feel free to ask