புதுடெல்லி, ஜூன்.30-
பிரதமர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று இருக்கும் நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
மேலும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படக்கூடும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் முன்னாள் தொலைதொடர்ப்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரத்தை, அமைச்சர்கள் குழுவிடமிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றினார்.
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை மாற்றியதில் மாறன் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலில் அவரைத்தான் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
2006 -2008 ஆண்டு காலத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்தது. மாறன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன் குற்றம் சாட்டினார்.
மேலும் இதுகுறித்து 2011 ஜூன் 6-ம்தேதி சிபிஐ சிவசங்கரனின் வாக்குமூலத்தை பதிவுசெய்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் தவறு ஏதும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே 3-வது குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பற்றி இந்த குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஸ்பெக்ட்ரம் ஊழலை முதன் முதலாக தொடங்கி வைத்த ஒரு முக்கியப் புள்ளி பற்றியும் 3-வது குற்றப்பத்திரிகையில் தகவல்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.
மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பெயர் அடிபடத் தொடங்கியதையடுத்து அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியது முக்கியமானதாக கருதபடுகின்றது.

0 comments:
Confused? Feel free to ask