Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.
Showing posts with label Congress. Show all posts
Showing posts with label Congress. Show all posts

Monday, December 20, 2010

ஊழலை அடியோடு ஒழிப்போம்: சோனியா பேச்சு

Be the first to comment!
Labels:
எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தலை எதிர்த்து
போராடுவோம் என்று நேற்று மன்மோகன்சிங் கூறினார். மன்மோகன் சிங்கிற்கு பக்கபலமாக
இருந்து ஒற்றுமையுடன் காங்கிரஸ் ஊழலை அடியோடு ஒழிக்குமென சோனியா காந்தி இன்று
நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கூறினார்.

அவர் கூறியதாவது:-
பேச்சில் மட்டும் அன்றி காங்கிரஸ்
தோழர்கள் கூட்டாக பாடுபட்டு ஊழலை அடியோடு ஒழிப்போம். பிரதமர் மன்மோகன்சிங்
ஆட்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

பா.ஜனதா மற்றும் இதர கட்சிகளின்
அச்சுறுத்தல்
, பழி இவைகளுக்கு
ஆளாகாமல் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் எதிர்த்து நியாயத்திற்காக போராட வேண்டும்.
ஆறரை ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி
மிக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. காங்கிரஸ் செய்த அனைத்தும் வேறு எவரும்
செய்யா சாதனைகள். பா. ஜனதாவுடன் ஒப்பிட்டு காங்கிரஸின் சாதனைகளை நாம்தான்
மக்களிடையே சேர்க்க வேண்டும்.

ஊழல் விவகாரங்களில் பா. ஜனதா இரட்டை
வேடம் போடுகிறது. இதை காங்கிரஸ் தொண்டர்கள் மக்களிடையே சொல்ல வேண்டும். ஒவ்வொரு
தொகுதிக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களை தெளிவுர செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணியில் அல்லாத மாநில
அரசுகள் நிறைவேற்றும் சில திட்டங்கள் கூட காங்கிரஸின் திட்டமாகத்தான் இருக்கும்.
அந்த அரசுகள் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அமல்படுத்திகிறார்க
இவ்வாறு சோனியா கூறினார்.
மேலும் இரண்டு நாட்கள் நடந்த
மாநாட்டின் சுறுக்க உரையையும் வாசித்தார்.

Sunday, December 19, 2010

22-ந் தேதி விழுப்புரம் வரும் ராகுல்காந்தியை வரவேற்க தீவிர ஏற்பாடுகள்

Be the first to comment!
Labels:

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11 மணிக்கு விழுப்புரம் வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 19 பாராளுமன்ற தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஆதி திராவிட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

ராகுல்காந்தி வருகையை யொட்டி அவர் பேசுகின்ற இடம் மற்றும் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடத்தை தேர்வு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள ஜெயம் மண்டபம், கரும்பு விவசாயிகள் மண்டபம் ஆகியவற்றை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஹர்ஸ்வர்த் நேற்று வந்து பார்வையிட்டார். அவருடன் விழுப்புரம் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.ரமேஷ், துணை தலைவர் சிவா, விழுப்புரம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், விழுப்புரம் பாராளுமன்ற துணை தலைவர் ரகுநாதன், பொதுச்செயலாளர் சேட்டு என்கிற இக்பால் ஆகியோர் வந்திருந்தனர்.

வானூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் தண்டபாணி, விக்கிரவாண்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ்குமார், உளுந்தூர்பேட்டை பொதுச் செயலாளர்கள் ஹரி, வெங்கடேசன், விழுப்புரம் சட்டமன்ற பொதுச் செயலாளர் மணிகண்டன், விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவர் குலாம் மொய்தீன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தார்கள்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இன்று விழுப்புரத்திற்கு வருகின்றனர். ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்கின்றனர். விழுப்புரத்திற்கு வரும் ராகுல் காந்தியை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர் வருகையை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz