Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Tuesday, January 4, 2011

ஓட்டுக்காக இலவச திட்டங்கள்: காய்கறி- வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது; ஜெயலலிதா குற்றச்சாட்டு

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன.4-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஏழை, எளிய மக்கள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டில் இலவசங்கள் தொடரும் என்று புத்தாண்டு தினத்தன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசி இருக்கிறார். இதை வலியுறுத்தியதன் மூலம், வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அப்பொழுதுதான், சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து, ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்.
 
அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் தன்னிச்சையாக இலவசங்களை கொடுத்துக்கொண்டு வருவது, கைவசம் தங்கத்தை இருப்பில் வைத்துக் கொள்ளாமல் கரன்ஸி நோட்டுக்களை அச்சடிப்பது போன்றது ஆகும். இதன் மூலம் பணத்தின் மதிப்பு, பணம் அச்சடிக்கும் தாளின் மதிப்புக்கு சமமாகக் கூட இல்லாமல் மிகவும் மலிந்துவிடும்.
 
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 90 ரூபாய். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை. அனைத்துக் காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.
 
சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை கிட்டதட்ட ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல். சமையல் எரிவாயு அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 30 நாட்கள் வரை விநியோகம் செய்யப்படுவதில்லை. அந்த அளவுக்கு எரிவாயு பற்றாக் குறை நிலவுகிறது.
 
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம், உத்தேச பயனாளிகளுக்கு இந்தச் சலுகை பயனளிப்பதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக தரப்படுகின்றன.
 
ஆனால் கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவு ஆகிறது.  கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில், கர்நாடகத்திற்கு 911 டி.எம்.சி. அடி தண்ணீரையும், மகாராஷ்டிராவிற்கு 666 டி.எம்.சி. அடி தண்ணீரையும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 1,001 டி.எம்.சி. அடி தண்ணீரையும் பகிர்ந்து அளித்து நீதியரசர் பிரஜேஷ் குமார் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்தத் தாவாவில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களும் இதற்கு முன்பு பெற்றிருந்ததைவிட கணிசமான அளவுக்கு கூடுதலாக நீரைப் பெற இந்தத் தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெறும் 15 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே.
 
முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்த வரையில், பழைய அணையை செயலிழக்கச் செய்து, புது அணையை கட்ட கேரளா தயாராகி வருகிறது. புது அணை கட்டப்பட்ட பிறகு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது.   இலங்கையில், தமிழ் இனத்தின் கணிசமான பகுதி ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது.
 
இன்று கூட கிட்டதட்ட ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய சொந்த மண்ணிலேயே முட்கம்பியால் ஆன வேலிக்கு பின்னால் அகதிகளாக மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
ஆனால், கருணாநிதியோ தன் மகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி, அவர்களை வைத்து இலங்கையில் எல்லாம் சிறப்பாக நடக்கிறது என்று சான்றிதழ் கொடுக்க வைத்தார்.
 
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நாள், பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோர்ட்டில், அம்மாவுடன் போகச் சொன்னால் அழுது புரளுவேன்;நடிகை வனிதாவின் மகன் பேட்டி

Be the first to comment!
Labels: ,
சென்னை, ஜன.4-

நடிகர் விஜயகுமார் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகை வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் செய்தார். விஜயகுமார் தரப்பில் இருந்தும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை நடிகை வனிதா தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியை (வயது 9) தன்னிடம் இருந்து ஆகாஷ் கடத்தி சென்றுவிட்டதாகவும், சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்தனர். ஜனவரி 5-ந் தேதிக்குள் சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். காலக்கெடு 2 நாட்களே உள்ள நிலையில், சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தான். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு விஜய்  

ஸ்ரீ ஹரி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீ யாருடன் போக விரும்புகிறாய்?.

பதில்:- அப்பாவுடன்.

கேள்வி:- ஏன்?.

பதில்:- அம்மாவுடன் போனால் டார்ச்சர் செய்வாங்க.

கேள்வி:- அம்மா உன்னை நன்றாக பார்த்து கொண்டதாக கூறுகிறாரே?.

பதில்:- அப்படி ஒன்றும் இல்லை. எனது வளர்ப்பு தந்தை ஆனந்தராஜன், தினமும் நான் பள்ளிக்கூடம் செல்லும் போது, `குட்மானிங்' சொல்ல வேண்டும்என்று கூறுவார். நான் சொல்ல சென்றால், நன்றாக தூங்கிக் கொண்டுஇருப்பார். எழுப்பினால், கண் விழிக்க மாட்டார். நான் பள்ளிக்குசென்றுவிடுவேன். மாலையில் வீட்டிற்கு வந்தால், ஏன்? காலையில்சொல்லிவிட்டு செல்லவில்லை என்று என்னை அடிப்பார். முழங்கால் போடச்சொல்வார். இதை அம்மா (வனிதா) தட்டிக் கேட்க மாட்டார். அவர்கள் இரண்டுபேரும் மாலையிலேயே பார்ட்டிக்கு செல்வதாக கூறி சென்று விடுவார்கள். வீட்டில் 2 பேரும் மது அருந்தும் போதும், என்னை பிரிட்ஜில் இருந்து ஐஸ்எடுத்து வரச் சொல்வார்கள். எனக்கு டீ கூட வேலைக்கார பெண்தான் தருவாள்.

கேள்வி:- வனிதாவுடன்தான் நீ செல்ல வேண்டும் என்று கோர்ட்டுகூறியுள்ளதே?.

பதில்:- போகமாட்டேன். அப்படி சொன்னால் அங்கேயே அழுது புரளுவேன்.

இவ்வாறு சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரி கூறினான்.

அதனைத் தொடர்ந்து, அவனது பாட்டி மகேஸ்வரி (ஆகாஷின் அம்மா) நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது பேரனை மையமாக வைத்து நடக்கும் பிரச்சினை உங்களுக்கு எல்லாம் தெரியும். அவன் சுதந்திரமாக படிக்க, எங்களுடன் இருக்க விரும்புகிறான். அங்கு சென்றால் (வனிதாவிடம்) செத்து விடுவேன் என்று புலம்புகிறான்.

சிறுவயதிலேயே அவன் படும் வேதனையை பார்க்க எங்களால் முடியவில்லை. 7 வயது வரை அவன் எங்களுடன்தான் இருந்தான். அதன் பின்னர்தான் அங்கு வளர்ந்தான். எனது பையன் (ஆகாஷ்) வாழ்க்கைதான் வீணாகிவிட்டது. என் பேரன் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது.
இப்போதுகூட பள்ளிக்கூடம் சென்றால் எங்கே கடத்தி விடுவார்களோ? என்று பயந்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளான். எனது மகன் ஆகாஷ் இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆகாஷ் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை உயர்வு இப்போது இல்லை மத்திய அரசு முடிவு

Be the first to comment!
Labels:
புதுடெல்லி, ஜன.4-
உணவு பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் டீசல் விலையை உயர்த்தும்முடிவை மார்ச் மாதம் வரை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டுவருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதனால், பெட்ரோல்விலையை சர்வதேச சந்தைக்கு ஏற்ப அந்தந்த எண்ணெய் நிறுவனங்களேஉயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்து விட்டது. அதன் காரணமாக கடந்தஓராண்டுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, டீசல் விலையையும் உயர்த்த வேண்டும் என எண்ணெய்நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. டீசல் விற்பனையால் ..சி., பாரத்பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.128 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, டீசல் விலையைஉயர்த்த வேண்டும் அல்லது எண்ணெய் நிறுவனங்களே விலையை உயர்த்தஅனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
பெட்ரோலை போல டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தஅனுமதித்தால் லாரி வாடகை உயரும். அதனால், அத்தியாவசியபொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். அதன் காரணமாக, டீசல்விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவது குறித்து மத்திய மந்திரிகள் குழுகூட்டத்தில் கடந்த மாதம் ஆலோசிக்கப்பட்டது. இரண்டு முறை விவாதம்நடந்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, எதிர்பார்க்காத அளவுக்கு உணவுப் பொருட்களின் பணவீக்கம்சதவீதமாக உயர்ந்துவிட்டது. அதன் விளைவாக ஒட்டு மொத்த பணவீக்கமும் கணிசமாக அதிகரித்தது. எனினும், ஒட்டு மொத்த பணவீக்கத்தின்அளவானது மார்ச் மாதத்துக்குள் 6 முதல் 6.5 சதவீதத்துக்குள் வந்து விடும் எனமத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 14.44
இதைத் தொடர்ந்து, டீசல் விலை உயர்வையும் மார்ச் இறுதி வரை ஒத்திவைக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிரதமரின் பொருளாதாரஆலோசனை குழு நேற்று தெரிவித்தது.
குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில், "ஒருவேளை, இந்த ஆண்டுஇறுதிக்குள் 6 சதவீதத்துக்கு பணவீக்கத்தின் அளவு குறைந்தால் டீசல்விலையை உயர்த்துவதற்கான நேரம் வந்து விட்டதாக கருதலாம். சர்வதேசசந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலை சரிசெய்யப்படும் சாத்தியமும் உள்ளது'' என்றார். (2011)

பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி திரும்பினார்; மு.க.ஸ்டாலின் வழியனுப்பினார

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன.4-
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம்டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்றுகாட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாடு முடிந்ததும்அங்கிருந்து கார் மூலம் போர்டு கார் தொழிற்சாலை வளாகத்தைவந்தடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைமீனம்பாக்கம் விமானம் நிலையத்திற்கு பகல் 12.05 மணிக்கு வந்து சேர்ந்தார். பிரதமருடன் துணை முதல்-மந்திரி மு..ஸ்டாலின், மத்திய மந்திரி.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, தயாநிதிமாறன் ஆகியோர் வந்தனர். 98-
இதன் பின்பு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, துணை முதல்-மந்திரிமு..ஸ்டாலின் மலர் செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், சென்னைமாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள்ஆற்காடு வீராசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், தங்கம் தென்னரசு, தமிழககாங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தலைமைச்செயலாளர் மாலதி, எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி ஜே.எம்.ஆருண், எம்.எல்..க்கள் யசோதா, ராணிவெங்கடேசன், மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச்செயலாளர்எஸ்.கே.. அகமது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வழியனுப்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் தனி விமானம்மூலம் பகல் 2.30 மணிக்கு டெல்லி திரும்பினார். பிரதமருடன் மத்திய மந்திரி.சிதம்பரம் உடன் சென்றார்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz