Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Tuesday, May 17, 2011

தாம்பரம் படப்பையில் உள்ள நடிகர் வடிவேலு பண்ணை வீட்டில் தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு

Be the first to comment!
Labels:
சட்டமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் பண்ணை வீட்டில் திடீர் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த பண்ணை வீடு தாம்பரம் அருகேயுள்ள படப்பை புஷ்பகிரி பகுதியில் இருக்கிறது. மாமர தோப்புகள் மத்தியில் இவ்வீடு கட்டப்பட்டு உள்ளது. பண்ணை வீட்டில் வேலு என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.இவர் தனது குடும்பத்தினருடன் தோப்பில் தனி வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை இந்த பண்ணை வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்தனர். வீட்டில் 6 கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினார்கள். காவலாளி வேலுவுக்கும் மிரட்டல் விடுத்தனர். அவரிடம் வடிவேலுவின் செல்போன் நம்பரை கொடுக்குமாறு கேட்டனர். அவர் தெரியாது என்றார்.

உடனே மர்ம ஆசாமிகள் வேலுவின் செல்போனை வாங்கி அதில் வடிவேலு நம்பர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அதில் வடிவேலு எண் இல்லாததால் மீண்டும் அதை வேலுவிடம் கொடுத்தனர்.வருகிற சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்து விடவேண்டும். இல்லா விட்டால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டார்கள். இது குறித்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சிறு ஆபரேஷன் மூலம் ரஜினிக்கு நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றம்: குணம் அடைவதாக டாக்டர்கள் பேட்டி

Be the first to comment!
Labels:
சென்னை, மே. 17-

ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

சி.டி. ஸ்கேன் உள்பட பல் வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி இருந்ததால் அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது. காய்ச்சல், சளிக்கும் மருந்து கொடுத்தனர்.

நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறு ஆபரேஷன் மூலம் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

நேற்று ரஜினிக்கு நெஞ்சில் லேசான ஆபரேஷன் நடந்தது. இதன் மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு ரஜினி குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரஜினிக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் மருத்துவ செய்தி குறிப்பில் தெரி உள்ளது.

விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டது.

ரஜினியுடன் வார்டில் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை பற்றி நேற்றும், இன்றும் மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ரஜினி உடல் நிலைபற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு இருந்தனர். சில ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டு வாசலிலேயே காத்து கிடக்கின்றார்கள். ரஜினி வெளியே வந்து தோன்ற வேண்டும் அல்லது வீடியோ மூலம் அவரைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

Be the first to comment!
Labels:
சென்னை, மே.17-

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா நேற்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Thursday, May 12, 2011

Barc Facilities, Kalpakkam invites application for Stipendiary Trainees (Category II) for training in BARC Facilities, Kalpakkam

Be the first to comment!
Labels:
Download here
***
-----------
***

Monday, May 9, 2011

TN BOARD RESULTS (12th results direct link) +2 RESULTS

Be the first to comment!
Labels:
*************
+2 RESULTS DIRECT LINK
*************
TN BOARD RESULTS
*************
12th RESULTS
*************

Friday, May 6, 2011

கனிமொழி முன் ஜாமீன் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

Be the first to comment!
Labels:

புதுடெல்லி, மே.6-
  
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடநத மாதம் 25-ந்தேதி  டெல்லி நீதிமன்றத்தில்  சி.பி.ஐ. சார்பில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கலைஞர் டி.வி. பங்குதாரர் என்ற முறையில் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. இயக்குனர்களில் ஒருவரான சரத்குமார் ஆகியோரது பெயர்கள்  அந்த குற்றப்த்திரிகையில் இடம் பெற்றிருந்தன.    

இதனையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கனிமொழி உள்பட 14 பேருக்கு மே6-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது அதனை தொடர்ந்து கனிமொழி கடந்த புதன்கிழமை டெல்லி சென்றார். கடந்த இரண்டு நாட்களாக அவர் சட்ட ரீதியாக எதிர் கொள்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.    

பின்னர் இன்று (மே-6) காலை 9.30 மணிக்கு கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ  நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்  மேலும் தி .மு க  எம்.பிக்கள் 5 பேர் உடன் சென்றார். 10 மணிக்கு உள்ளே சென்ற கனிமொழி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்னிலையில் ஆஜர் ஆனார்.     

இவ்வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. சார்பில் மூத்த வக்கீல்  ராம்ஜெத் மலானி ஆஜரானார்.   

அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைக்கேடுக்கும் கனிமொழி எம்.பி.க்கும் எந்த தொடர்பும் இல்லை கலைஞர் தொலைக்காட்சியில்  அவர் ஒரு பங்குதாரர் மட்டுமே அதுவும் அவரிடம் பெரும்பாலான பங்குகள் கூட இல்லை 20 சதவீத பங்கு மட்டும் உள்ளது.   மற்றபடி எந்த விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு கிடையாது. மேலும் கலைஞர் டி.வி. தினசரி நடவடிக்கைகள் எதிலும் கனிமொழி தலையிடுவது இல்லை. அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி செய்தாக கூறுவது தவறு.     

சதி குற்றச்சாட்டுகளில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா பெயர் தான் இடம் பெற்றுள்ளது. கனிமொழி பெயர் எதிலும் இல்லை எனவே சதி செயல்களுக்கு ராசா மட்டுமே பொறுப்பாவார்.    

பின்னர் இந்திய குற்றவியல் சட்டபிரிவு 437-ன்படி பெண்கள், முதியோர், குழந்தைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கனிமொழி எம்.பிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார்.    

இதை தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணை 2 மணியளவில் தொடங்கியது  அதில்  சி.பி.ஐ தரப்பு வக்கீல் லலித் வாதாடினார். அதில் கனிமொழி எம்.பியிடம் சில கேள்விகள் கேட்டார் கனிமொழி எம்.பி. 2ஜி ஊழலுக்கு உடந்தையாக  இருந்து உள்ளார்.அதற்கு ஆதாரங்கள் உள்ளது.   

மேலும் எம்.பியாக இருந்து கொண்டு இவ்வாறு ஊழல் செய்தது அப்பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதாக  உள்ளது .   இதற்காக இந்திய குற்றவியல் சட்டபிரிவு  120பி-ன்படி  ஊழலுக்கு உடந்தையா இருந்ததற்கு அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.     

இந்நிலையில் கனிமொழியின் முன் ஜாமீன் மனு  மீதான விசாரணையை டெல்லி நீதிமன்றம் நாளை வரை ஒத்தி வைத்துள்ளது. ஆனால் ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஜாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோருக்கு முன் ஜாமீன் தர டெல்லி நிதிமன்றம் மறுத்துள்ளது.   

மேலும்   நேற்று தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சட்டப்படி எதிர் கொண்டு இவ்வழக்கிலிருந்து வெளிவருவேன் என்றும்   என் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு கடுமையானது   அந்த  கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன் என்றும்  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்  முன் ஜாமினுக்கு தாக்கல் செய்ய  விரும்பவில்லை  என்று  தெரிவித்திருந்தார் 

இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கனிமொழி . மாலையில் விசாரணை முடிந்து வெளியே வந்த போது  அவரது கணவர் அரவிந்தன் உடன் வந்தார். ஆனால்  பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிகள்  கேட்ட கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல்  அமைதியாக காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.  

Tuesday, May 3, 2011

“மங்காத்தா” படப்பிடிப்பில் நடிகர் அஜீத் காயம்

Be the first to comment!
Labels:
தாராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது,

தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார் என்றார்.

புனே அணியில் ஒப்பந்தம்:ஐ.பி.எல். போட்டியில் கங்குலி ஆடுகிறார்;

Be the first to comment!
Labels:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கங்குலி. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். 4-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது கோபம் அடைந்தனர். கொச்சி அணியில் கங்குலி விளையாடுவார் என்று கூறப்பட்டு அது பின்னர் உறுதியாகவில்லை. 

இந்த நிலையில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார். காயம் அடைந்த நெக்ராவுக்கு பதிலாக அவர் புனே அணியில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுதொடர்பாக புனே வாரியர்ஸ் அணியின் இயக்குனர் அபிஜித் சர்கார் கூறும்போது,

நெக்ராவின் உடல் தகுதி அறிக்கைக்காக காத்திருந்தோம். அந்த அறிக்கை நேற்று வந்து விட்டது. நாங்கள் ஏற்கனவே கங்குலியுடன் பேசிவிட்டோம். அவரது அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே நேற்று இரவு கங்குலியை புனே அணியில் இறுதி செய்தோம் என்றார். ஐ.பி.எல். போட்டியில் கங்குலி விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி: வாலிபர் கைது

Be the first to comment!
Labels:
 
சென்னை, மே. 3-

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணிமாறன், நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன், ராணிப்பேட்டை பாலாஜி ஆகியோர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா விடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் ஜான்நியூ பினோத் என்பவர் ஜெர்மனி, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினார். பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வசேகர், சப்- இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.   தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று நண்பகல் தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் நியூ பினோத்தை பிடித்து விசாரணை செய்ததில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார்.

மேலும் விசாரணையில் தானும், தனது நண்பர் சலீம் என்பவரும் சேர்ந்து இதே போல் கடலூரிலும் 75-க்கும் மேற்பட்டவர்களிடம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, போலியான விமான பயணச்சீட்டு, விசா, வேலைக்கான உத்தரவு ஆகியவற்றை தயார் செய்து கொடுத்து ஏமாற்றி விட்டு, தலைமறைவாகியதாக கூறி னார்கள்.

கைது செய்யப்பட்ட ஜான் நியூ பினோத் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz