Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Friday, December 9, 2011

இதய பகைவன் `புகை'யை பற்றி சில உண்மைகள்

Be the first to comment!
Labels:
1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அதில் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ். நீரின் கொதி நிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்ப நிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடு 2-8 சதவீதம் செறிவு இருக்கிறது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நிகோடின் பெரும் நச்சுக்கலவை. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.





6. நினைவிருக்கட்டும், மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும்போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம், மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும், குழந்தை அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்றவரைக் காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட ஹார்ட் அட்டாக் வரும் இளைஞர்கள் சிறு வயது முதலே "Passive Smoking'' என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட் புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட் புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வரை தினம் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

*என்றும் தேசத்திற்காக
Amazing Tamilnadu
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz