இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் ஜனாதிபதியாக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்று பிரதீபா பட்டீலிடம் இன்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ``நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.