Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Thursday, January 20, 2011

இணைய தளம் மூலம் தேர்வு; உலகின் 7 புதிய அதிசயங்கள் அறிவிப்பு; தாஜ்மகாலுக்கு முதலிடம்

Be the first to comment!
Labels:
லண்டன், ஜன 20-


உலகில் புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்ய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்னாட் வெப்பர் என்பவர் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. யுனஸ்கோ அமைப்பும் வாக்கெடுப்பு மூலம் உலக அதிசயங்களை தேர்வு செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தது.

ஆனால் அதையும் மீறி தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. இணைய தளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்து 21 கட்டிடங்கள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.

இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதிப்மினார் உள்ளிட்ட கட்டிடங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் எகிப்து பிரமிடை நிரந்தர அதிசயமாக கூறி இருந்தனர். மீதி 7 கட்டிடங்களை தேர்வு செய்ய தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. உலகம் முழுவதும் இருந்து 10 கோடி பேர் ஓட்டு போட்டனர்.

இறுதியில் 7 அதிசயங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலை நேற்று போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில் முறைப்படி அறிவித்தனர்.

இதில் தாஜ்மகால் முதலிடத்தை பெற்று உள்ளது.  7 அதிசயங்களின் பெயர் மற்றும் அமைந்துள்ள நாடுகள் விவரம்:-

1. தாஜ்மகால் இந்தியா

2. சீனபெருஞ்சுவர்- சீனா

3. பெட்ரா-ஜோர்டான்

4. பிரமாண்ட ஏசுநாதர் சிலை பிரேசில்

5. மச்சுபிச்சு- பெரு

6. மயன்-மெக்சிகோ

7. கொலோசியம்- இத்தாலி

7 அதிசயங்கள் அறிவிக்கப்பட்டாலும் இதை ஐ.நா. அமைப்போ அல்லது முக்கிய அமைப்புகளோ ஏற்கவில்லை.

Saturday, January 8, 2011

ஐ.பி.எல். போட்டி: ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலம்

Be the first to comment!
Labels:
பெங்களூர், ஜன. 8- 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

வீரர்கள் ஏலம் முறையில் அணிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதால் இந்தப்போட்டிக்கு அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை 3 ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010) ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. 4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ந்தேதி தொடங்குகிறது.

இதில் கூடுதலாக புனே, கொச்சி அணிகள் சேர்க்கப்பட்டுள் ளன. இதனால் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.   கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களின் ஒப்பந்தம் முடிந்தது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் விருப்பம் உள்ள வீரர்களில் 4 பேரை நீட்டித்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். அமைப்பின் விதியில் தெரிவிக்கப் பட்டது.

இதன்படி சென்னை அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பிமார்கல் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரும், மும்பை அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், போலாட் (வெஸ்ட் இண்டீஸ்), மலிங்கா (இலங்கை) ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். வார்னே, வாட்சனை ராஜஸ்தான் அணியும், ஷேவாக்கை டெல்லி அணியும், வீராட் கோக்லியை பெங்களூர் அணியும் நீட்டித்துள்ளது. மொத்தம் 12 வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர். 

4-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடக்கிறது. மொத்தம் 350 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அணியும் 30 வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தொகை ரூ.40.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புதிய அணிகளான கொச்சி, புனே ஆகிய 5 அணிகளும் ரூ.40.5 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். சென்னை, மும்பை அணி ஏற்கனவே தலா 4 வீரர்களை ரூ.20.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து விட்டது. இதனால் அந்த 2 அணி களும் ரூ.20.25 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

ராஜஸ்தான் அணி ரூ.25.6.கோடி வரைக்கும், டெல்லி டேர்டேவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா ரூ.32.4 கோடி வரைக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தம் ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்.

தே.மு.தி.க.வுக்கு எதிராக விளம்பரம்; விஜயகாந்த் கண்டனம்

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன. 8-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 9.1.11 அன்று சேலத்தில் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது.

அதனையொட்டி கழக நிர்வாகிகளும், தொண்டர் களும், ஆதரவாளர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். சற்றும் எதிர்பாராத வகையில் மாலைமலரில் 7.1.2011 அன்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வின் தலைமையை விமர்ச்சித்து தே.மு.தி.க. நிர்வாகி களின் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.

தே.மு.தி.க. விற்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்தவிதமான சம்பந்த மும் இல்லை. தே.மு.தி.க. நிர்வாகிகளான வி.சி. சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்) கே. செந்தாமரைக்கண்ணன் (மத்திய சென்னை மாவட் டக் செயலாளர்), விசாக ராஜன் (துறைமுகப் பகுதி செயலாளர்), ஆர். கோவிந் தன் (ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர்) ஆகியோர் பெயரில் இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால் இந்த அற்பக் காரியத்தை செய்த அந்த சமூக விரோதி களை கண்டுபிடித்து அவர் கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க.வைப் பொறுத்த வரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டி: ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலம்

இந்தியாவில், ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு

Be the first to comment!
Labels:
வேலூர் சி.எம்.சி.யில் குழந்தைகளுக்கான நோய்கள் என்ற தலைப்பில் குளிர்கால கருத்தரங்கு நடந்தது. அதில், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் குறித்தும் அவற்றை குணப்படுத்தும் சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.   ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவற்றை குணப்படுத்த முடிவதில்லை.

ஏனெனில் பொருளாதார பற்றாக் குறையே இதற்கு காரணமாக உள்ளது என்று டாக்டர்கள் கூறினர். வளர்ந்த நாடுகளில் 20 சதவீதமும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 80 சதவீதம் குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்படும் 90 சதவீத குழந்தைகள் காப் பாற்றப்படுகின்றனர்.   அதே நேரத்தில் இந்தியாவில் 20 முதல் 40 சதவீதம் குழந்தைகள் மட்டுமே குணப்படுத்தப்படுகின்றனர். இருந்தும் வெளிநாடுகளை விட இந்தியாவில்தான் குழந்தைகள் ஆரோக்கியத் துடன் பிறக்கின்றன.

ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சத்தாண உணவு கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவலை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முரளி சிந்த கும்பாலா தெரிவித்தார்.

அமெரிக்காவில் கூடுதல் இரும்பு சத்து காரணமாக பெரும்பாலான குழந்தைகள் அவதிப்படுகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் போதிய அளவு இரும்பு சத்து கிடைக்காமல் நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்ற தகவலை டியூக் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளிட முதல்வர் நான்சி சி.ஆண்ட்ரூஸ் கூறினார்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz